மயூரநாதர் கோயிலுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிய அபயாம்பிகை யானை - கொண்டாட்டத்தில் கோயில் நிர்வாகம்
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அபயாம்பிகை யானை வந்து 51 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதனை போற்றும் விதமாக கொண்டாடாப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 -ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் இந்த யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாகவும், மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை, மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம்.
மழையால் ஸ்தம்பிக்கும் மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த தண்ணீர்! பக்தர்கள் அவதி!
யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கடந்த ஆண்டு பொதுமக்களும், யானை விரும்பிகளும் பொன்விழாவாக கொண்டாடினர். இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைக்கு காலில் கொலுசு, கழுத்தில் டாலருடன் சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு யானை மீது புனித நீர் எடுத்து வருதல், யானைக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வருதல், யாகசாலை பூஜை செய்து யானைக்கு கலசபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 50 ஆண்டுகளாக கோயிலில் வசித்து வரும் அபயாம்பிகை யானையுடன் யானைப்பாகன் முதல் அனைவரும் யானைக்கு பிடித்த உணவுகளை பாசத்தோடு வழங்கி யானையுடன் சேர்ந்து நின்று செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து யானையிடம் ஆசிர்வாதம் பெற்று இன்புற்றனர். மேலும் பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.
வானவேடிக்கையோடு மேளதாளங்கள் முழங்க, குதிரை, ஒட்டகம் முன்னே செல்ல நடைபெற்ற நிகழ்ச்சியில் வழியெங்கும்வழியெங்கும் வணிகர்கள் பழங்கள், காய்கறிகள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை அபயாம்பிகை யானைக்கு கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். யானையின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் மயிலாடுதுறை பகுதி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அபயாம்பிகை யானை கோயிலுக்கு வருகை தந்த 51 வது ஆண்டுவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை அடுத்து மயூரநாதன் கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு 51 வது ஆண்டு விழா நடத்தப்பட்டது. யானைக்கு கலசபிஷேகம் நடத்தப்பட்டு நேற்றிரவு இரவு பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு மயிலாடுதுறை நகரின் முக்கிய விதிகளில் வழியாக திருவீதியுலா நடைபெற்றது.