(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai Rain Alert: சென்னைக்கு அலர்ட்! ”இன்று மாலைவரை மிக கனமழை பெய்யும்"...தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
Chennai Weather Forecast Today: சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Chennai Weather Today: சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மாலை வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம் என்ன?
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ”சென்னையில் ஒரு சில இடங்களில் நேற்று அதாவது ஜனவரி 7ஆம்தேதி நள்ளிரவு முதல் இன்று மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தமிழ்நாடு தனியார் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
— Tamil Nadu Weatherman (@praddy06) January 7, 2024
மேலும், ”செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இன்று மாலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கண்ட மாவட்டங்களில் 75 மி.மீ முதல் 150 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில் 150 முதல் 250 மி.மீ அளவுக்கு அதீத மழைக்கு வாய்ப்புள்ளது" என்றார் தமிழ்நாடு தனியார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
”கடலோர மாவட்டங்களான கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்று மாலை வரை மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்று வரை மழை பெய்யும். பெய்யும் மழை மிக்ஜாம் புயல் போல் இருக்காது. ஆனால், 100 முதல் 200 மி.மீ மழை பெய்தாலே சில இடங்களில் தண்ணீர் தேங்கும்” என்றார்.
வானிலை மையம் சொல்லவது என்ன?
தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TN Rain News LIVE: புதுவையில் 12 செ.மீ மழை பதிவு.. மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை..