Palani Murugan Temple: வார விடுமுறையில் பழனி கோயிலில் அலைமோதிய கூட்டம்; நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
ஞாயிற்றுக் கிழமை நாளான நேற்று பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருந்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
Schools Holiday: மிரட்டும் குளிர்: டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு - அமைச்சர் அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் , ஞாயிறு விடுமுறை, தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்கள் என நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம், இலவச தரிசனம், சிறப்பு வழி கட்டண வரிசைகளில் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோயிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
2024 ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டியதில் 50 பேர் காயம்
அதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றம் துவங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பாதயாத்திரையாக அலகு குத்தி காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடி பாடி வருகின்றனர். எனவே கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.