மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழாவில் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற திவ்ய நற்கருணை பெருவிழாவில் உலக அமைதிக்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புனித அந்தோணியார் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு பகுதியில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் ஆலயம். இவ்வாலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
மறைவட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்பு
இதில் மயிலாடுதுறை மறைவட்ட அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை பவனி மற்றும் ஆராதனை செய்யப்பட்டன. சீர்காழி பங்குத்தந்தை டோனி அடிகளார் நற்கருணையின் மகத்துவம் குறித்து மறையுரையாற்றினார். புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காகவும், மக்கள் நலன்களுக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.
KTM Bikes: இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த கேடிஎம் பைக்குகள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
திரளாக கலந்து கொண்டு கிறிஸ்த்துவர்கள்
எருக்கூர் பங்குத்தந்தை இருதயசாமி அடிகளார் நற்கருணை ஆசீர் வழங்கினார். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் உள்ளிட்ட மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழிப்பட்டனர்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியா உலக அளவில் 3வது இடம் - விஞ்ஞானி செல்வமூர்த்தி பெருமிதம்