மேலும் அறிய

3 கோடி ரூபாயில் உருவான வெள்ளி ரதம் - வடம்பிடித்து இழுத்த அமைச்சர் சேகர்பாபு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரத வெள்ளோட்டத்தில் ஆதீனங்கள் மற்றும் அமைச்சர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோயிலில் புதிதாக மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ள வெள்ளி ரத வெள்ளோட்டத்தில் ஆதீனங்கள் மற்றும் அமைச்சர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது. 

3 கோடி ரூபாயில் உருவான வெள்ளி ரதம் - வடம்பிடித்து இழுத்த அமைச்சர் சேகர்பாபு

மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான் 

புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 

3 கோடி ரூபாயில் உருவான வெள்ளி ரதம் - வடம்பிடித்து இழுத்த அமைச்சர் சேகர்பாபு

மேலும் பல சிறப்புகள் 

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

3 கோடி ரூபாயில் உருவான வெள்ளி ரதம் - வடம்பிடித்து இழுத்த அமைச்சர் சேகர்பாபு

புதிய வெள்ளி ரதம் 

இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் பக்தர்களின் பங்களிப்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வெள்ளி ரதம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதற்கான வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27 -வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற வெள்ளி தேர் வெள்ளோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அதனை தொடர்ந்து வெள்ளி தேரில் ஸ்ரீ அபிராமி அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித கடங்கள் வைக்கப்பட்டு பூரணாகுதி மகாதீபாராதனை செய்யப்பட்டு வெள்ளித் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

3 கோடி ரூபாயில் உருவான வெள்ளி ரதம் - வடம்பிடித்து இழுத்த அமைச்சர் சேகர்பாபு

தேரை வடம்பிடித்து இழுத்த ஆதீனங்கள் 

அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள, தேரை அமைச்சர் சேகர்பாபு, தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், ரத்தினகிரி ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மயிலாடுதுறையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். ஆலய பிரகாரத்தை வலம் வந்து வெள்ளி தேர் நிலையை அடைந்தது. முன்னதாக கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு மேல வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Idumbavanam Karthik: ’’அரசியலுக்கு வாங்க..நேருக்கு நேர் மோதுவோம்!’’ இடும்பாவணம் கார்த்திக் சவால்DMK MLA VS People: ’’யாருக்கு வேணும் உன் சோறு..!’’Mla-வை சுத்துப்போட்ட பெண்கள்கடும் வாக்குவாதம்Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu ArjunGovt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
IND vs AUS 2nd Test : அந்த இடம் எனக்கு வேணாம்.. ராகுலே ஆடட்டும்.. தியாகம் செய்த ரோகித்
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
‘’விடியா திமுக அரசே.. மக்கள் உயிரோடு விளையாடுவதா?’’- ஈபிஎஸ் கடும் சாடல்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
விஜய் போட்ட உத்தரவு... விழுப்புரம் மக்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் செய்த உதவி..!
Mettur Dam: ஓய்ந்த மழை... மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு - இன்றைய நீர் நிலவரம்
ஓய்ந்த மழை... மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு - இன்றைய நீர் நிலவரம்
Embed widget