மேலும் அறிய

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுக்கு பின் நடந்த ஆன்மீக நிகழ்வு - பக்தர்கள் பரவசம்

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை பெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை பெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

யானைகளின் மீதேற்றி நடைபெற்ற திருமுறை வீதியுலா 

திருக்கோயில்களில் 10 நாள்கள் நடத்தப்படும் உற்சவங்களில் 4- ஆம் நாள் திருவிழாவில், திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்து அமைந்துள்ள பழமையான தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-ஆவது குருமகா சந்நிதானம் காலத்தில் 5 யானைகளின் மீதேற்றி திரு முறை வீதியுலா நடைபெற்றுள்ளது. பின்னர் சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுக்கு பின் நடந்த ஆன்மீக நிகழ்வு - பக்தர்கள் பரவசம்

ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி பெருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த  தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். 

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுக்கு பின் நடந்த ஆன்மீக நிகழ்வு - பக்தர்கள் பரவசம்

தற்போது இந்த ஆண்டு ஞானபுரீஸ்வரர் பெருவிழா ஞானபுரீசுவரர் கோயிலில் கடந்த மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 4-ஆம்நாள் திருவிழாவான யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது. அதனையொட்டி, ஆதீன திருமடத்தில் இருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன் நிறுத்தப்பட்டிருந்த யானை மீது திரு முறைகளை ஏற்றி, ஆதீன ஓதுவாமூர்த்திகள் சண்முக திருவரங்க யயாதி அமர்ந்துகொள்ள, தருமபுரம் ஆதீன தேவார பாட சாலை மாணவர்கள் திருமுறை களை வாசித்தவாறு முன் செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுக்கு பின் நடந்த ஆன்மீக நிகழ்வு - பக்தர்கள் பரவசம்

பூரண கும்ப மரியாதை 

ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமா சிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீதியுலாவில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இதில், ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் கல்லூரிச் செயலர் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சி. சுவாமிநாதன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர் தரிசனம் செய்தனர்.

TN School Reopen: தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுக்கு பின் நடந்த ஆன்மீக நிகழ்வு - பக்தர்கள் பரவசம்

முக்கிய நிகழ்வுகள் 

விழாவின் முக்கிய நிகழ்வான 26-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ம் தேதி திருத்தேர் உத்ஸவமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 30 -ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  சிவிகை பல்லக்கில்  பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கு உள்ளார்.

கரூரில் பெய்த கனமழையால் அமராவதியில் பெருக்கெடுத்து ஓடிய நீர்- மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget