சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORT
திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சு.வெங்கடேசன், உடல்நலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உடனே செல்போன் மூலம் நலம் விசாரித்துள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றோடு மாநாடு நிறைவு பெறும் நிலையில் மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டார். மூன்று நாட்களாக தொடர் மாநாட்டு பணிகளுக்கு ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், ஆறு மணி நேரம் மருத்துவர் கண்காணிக்கப்பில் இருக்கவும் அறிவுறுத்தினர். இந்தநிலையில் தனது உடல்நிலை சீராக இருப்பதாக சு.வெங்கடேசன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘இன்று காலையில் எனது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர். இச்செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு. பொன்முடி, திரு. சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கெகதம சிகாமணி, அன்னியூர் சிவா MLA மற்றும் விழுப்புரம் ஆட்சியர் தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.