மேலும் அறிய

வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

கடந்த ஆண்டைப் போலவே 2025 ஆம் ஆண்டிலும் மலையாளத்தின் முதல் வெற்றிப் படமாக டொவினோ தாமஸ் நடித்துள்ள ஐடெண்டிடி படம் அமைந்துள்ளது

Identity

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில்  த்ரிஷா, வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் என பலர் நடித்துள்ளார்கள்.  கடந்த ஆண்டு அன்வேஷிப்பின் கண்டெத்தும் , ARM என இரு ஹிட் படங்களை கொடுத்த டொவினோ தாமஸ் இந்த ஆண்டு   "IDENTITY" படத்தின் மூலம் தனது வெற்றியைத் தொடர்கிறார்.

Identity பட வசூல் 

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யமான திரைக்கதையும் விறுவிறுப்பான காட்சியமைப்புகளுடன் உருவாகி இருக்கும் இப்படம் மொத்தம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 1.8 கோடி வசூலித்தது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் அதிகரிக்கவே அடுத்தடுத்த நாட்களில் வசூலும் அதிகரித்தது. 

இரண்டாவது நாளில் "IDENTITY" திரைப்படம் 1.3 கோடியும் மூன்றாவது நாளில் 1.65 கோடியும் நான்காவது நாளில் ரூ 6.55 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலகளவில் இப்படம் இதுவரை ரூ 23.20 கோடி வசூலித்து இந்த ஆண்டின் முதல் மலையாள வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக டைம்ஸ் நாவ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது

வெற்றியைத் தொடங்கிய மலையாள சினிமா

கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான அன்வேஷிப்பின் கண்டெத்தும் திரைப்படம் அந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ் , பிரமயுகம் , ஆடு ஜீவிதம் , ஏ.ஆர்.எம் , மார்கோ என வருடத்தின் இறுதிவரை மலையாள சினிமாக்கள் வசூல் குவித்தன. அதே போல் இந்த ஆண்டை வெற்றிகரமாக தொடங்கி வைத்துள்ளார் டொவினோ தாமஸ். கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் அவரது ராசி தொடரும் என எதிர்பார்க்கலாம்.

டொவினோ தாமஸ்

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா முதலிய படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் தாண்டியும் கவனமீர்த்தார். இவர் நடித்த 2018 திரைப்படம் சர்வதேச அளவில் கவனமீர்த்தது. இப்படத்திற்காக நெதர்லாந்து நாட்டில் நடைபெறும்  செப்டிமியஸ் விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

HBD AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானைத் தெரியும்! அவங்க அப்பா யாருனு தெரியுமா? இவ்ளோ பெரிய பிரபலமா?

Embed widget