(Source: Poll of Polls)
அறுபதை தொட்ட ஆதீனம் - கோலாகலமாக துவங்கிய மணிவிழா ஆண்டு; பக்தர்கள் உற்சாகம்....!
தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானத்தின் அவதார திருநாள் மற்றும் மணிவிழா ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளின் அவதார திருநாள் மற்றும் மணிவிழா ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
பழமையான தருமை ஆதீனம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16 -ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான சைவத் திருமடம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்.
ஆதீன மடாதிபதி பிறந்தநாள்
இந்நிலையில் குருமகா சன்னிதானத்தின் அவதாரத் திருநாள் ( பிறந்தநாள் ) மற்றும் மணிவிழா ஆண்டு துவக்கம் புனர்பூசம் நட்சத்திர தினத்தில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அதிகாலை திருமடத்தில் சொக்கநாதர் பூஜை செய்தார். தொடர்ந்து மணிவிழாவை ஆண்டாக இந்தாண்டு முழுவதும் தினமும் ஒரு நூல் வீதம் 365 நூல்கள் வெளியிடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாலவாயுடையார் பயகர மாலை என்னும் நூலை குருமகா சன்னிதானம் வெளியிட்டார்.
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு;எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
ஆதீன மடாதிபதிக்கு கலசபிஷேகம்
அதனை தொடர்ந்து அவர் 25 வது குருமகா சன்னிதானத்தின் குருபூஜை வழிபாடு செய்த பின்னர் குரு மூர்த்தங்களில் குருவார வழிபாடு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்ற தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் சங்கு மண்டபத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் உக்ரரத சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டு, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுரம் ஆதீன கர்த்தருக்கு கலசபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பல்வேறு சுவாமி சன்னதிகளில் ஆதீனம் வழிபாடு
தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, முருகப்பெருமான் மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து திருமடத்திற்கு திரும்பிய தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஆதீன கோயில்களின் பிரசாதம் பார்த்தார். அதனையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தின் தந்தை மறைஞான சம்பந்தர், சகோதரர்கள் வெற்றிவேல், விருதகிரி, கார்த்திகேயன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்க்கோனி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்