130 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம்
130 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர் .
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருத்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் அருள்மிகு ஸ்ரீ அரும்பன்ன வனமூலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சமயக் குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக இந்த தலம் விளங்குகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இந்த கோயிலின் சித்திரை பெருவிழா கடந்த 24 -ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி அம்பாள் பட்டாடை உடுத்தி, அணிகலன்கள் அணிந்து பஞ்ச மூர்த்திகளுடன் இரண்டு திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் கைலாய வாத்தியம், மேளதாளங்கள் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வளம் வந்தது. இத்திரு தேரினை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் 1000 -த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுமார் 130 ஆண்டுகளுக்கு பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் உக்த வேதீஸ்வரர் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா, சகோபுர திருவிழா, திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டங்கள் உள்ளிட்டவை தற்போது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ECR Accident:சென்னையில் கோர விபத்து: அரசு பேருந்து மீது மோதிய ஆட்டோ: 6 பேர் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்