Madurai Temple: ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர்.
2024 புத்தாண்டினை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக வரவேற்றனர். இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சின்னஞ்சிறு கிராமங்கள் வரை மக்கள் நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து புத்தாண்டை வரவேற்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தினை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சியும் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டு இருந்தது. அதே போல் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை, மதுரை, திருச்சி என முக்கியமான மாவட்டங்களும் பிற மாவட்டங்களிலும் கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதே போல் ஆன்மீக ஸ்தலங்களிலும் மக்கள் வெள்ளத்தை காண முடிந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம்; அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
- மதுரை அழகர்கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களில் இனி இலவச லட்டு பிரசாதம்.. விவரம்..