ஆன்மீகம்: கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
தேர் வீதி ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்த குடம், பால்குடம் மற்றும் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
குறிப்பாக கரூர் மாரியம்மன் உலக புகழ்பெற்ற திருவிழா என்பதால் இந்த வைகாசி மாத திருவிழாவிற்கு கரூர் மட்டும் அல்லாது அருகில் உள்ள திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரிலிருந்து பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்காக ஏராளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்