கரூரில் புகழ்பெற்ற அம்மன் கோயில் விழா; யானை வாகனத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா
தான்தோன்றி மலை பகுதியில் புகழ்பெற்ற அம்மன் ஆலயத்தில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத பெரும் திருவிழா நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் யானை வாகனத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா காட்சி.
தான்தோன்றி மலை பகுதியில் புகழ்பெற்ற அம்மன் ஆலயத்தில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத பெரும் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முத்துமாரியம்மன் சுவாமி திருவீதி உலாவில் முத்து மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் முத்துமாரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதைத் தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து யானை வாகனத்தில் கொழுவிருக்க செய்தனர். மேல தாளங்கள் முழங்கு ஆலயத்திலிருந்து வானவேடிக்கையுடன் புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா தான்தோன்றி மலை சுற்று வட்டார பகுதியில் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முத்து மாரியம்மன் யானை வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ஸ்ரீ சௌந்தர நாயகி ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய திருவீதி உலாவில் கல்யாண பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகி, அலங்காரவல்லி சுவாமிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தனர். ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு பல்வேறு வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா காட்சி அளித்தார்.
கல்யாண பசுபதீஸ்வரர் வெள்ளி ரிஷிப வாகன திருவீதி உலா காட்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.