மாசி பெளர்ணமி; கரூரில் தாய்மார்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாத பௌர்ணமிய முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசிக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் மாரியம்மன், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு 54 தாய்மார்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு மாரியம்மன் ஆலய மண்டபத்தில் சுவாமி உருவம் போதித்த திருவிளக்குகை ஏற்றி வைத்து ஆலயத்தின் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் கூறினார்.
அதைத்தொடர்ந்து 54 சுமங்கலிகள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை சிறப்பாக வழிபாடு செய்தனர்.திருவிளக்கு பூஜைகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் மாதம் தோறும் பௌர்ணமி அன்று நடைபெறும் திருவிழாக்கு பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பெயர் பதிவு செய்ய வேண்டும் எனவும், திருவிளக்கு பூஜைக்கு தேவையான பித்தாளை திருவிளக்கு, குங்குமம், சந்தனம், வாழையிலை, பக்தி, சூலம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
மேலும் திருவிளக்கு பூஜை முன்னிட்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

