(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பகல் பத்து நான்காம் நாள் திருவீதி உலா
கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு பகல் பத்து நான்காம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் .
கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சுவாமி பகல் பத்து நான்காம் நாள் திருவீதி உலாவில் அச்ச அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.
கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு பகல் பத்து நான்காம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமி திருவீதி உலாவில் அச்சு அவதார அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமியின் நான்காம் நாள் திருவீதி உலாவில் ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமி ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இந்நிலையில் கரூர் அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு அச்சு அவதார அலங்காரத்தில் சுவாமி பகல் பத்து திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் பசுபதிபாளையத்தில் சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக 11ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை 200 மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக பதினோராம் ஆண்டு அன்னதான விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு அப்பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அதை தொடர்ந்து ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்பா சேவா அறக்கட்டளையின் சார்பாக திருவிளக்கு பூஜைக்கு தேவையான வாழை இலை, நெய், விளக்கு திரி, வெற்றிலை, பத்தி, சூடம், மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல், ஜாக்கெட் பிளவுஸ் உதிரிப்பூக்கள் ள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
அதை தொடர்ச்சியாக சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் கூறியபடி 1008 போற்றி பாடலை பாடி திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினர். கரூர், பசுபதிபாளையம் ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்பா சேவா அறக்கட்டளையின் 11ஆம் ஆண்டு அன்னதான விழாவில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை பசுபதிபாளையம் ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்பா சேவா அறக்கட்டளையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.