மேலும் அறிய

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

கார்த்திகை மாதம் பலரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வரும் சூழலில், மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

ஐயப்ப பக்தர்களுக்கு மிக மிக முக்கியமான மாதமாக கார்த்திகை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில்தான் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். மணிகண்டன் ஐயப்பனாக மாறியது எப்படி? அவருக்கு சபரிமலையில் கோயில் உருவானது எப்படி? என்பதை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மணிகண்டன் அவதாரம்:

முனிவர் ஒருவரின் சாபம் காரணமாக மஹிஷி என்ற பெண் அரக்கியாக மாறினார். அரக்கியாக மாறிய மஹிஷி படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி தவம் புரிகிறார். மஹிஷியின் தவத்தை மெச்சிய பிரம்மன், மஹிஷிக்கு காட்சி தந்தார். அப்போது, மஹிஷி தனக்கு சிவன் மற்றும் பெருமாளுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த வரத்தை பிரம்மன் அளிக்கிறார்.

பிரம்மனிடம் பெற்ற வரம் காரணமாக மஹிஷி தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்துகிறார். மஹிஷியை வதம் செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுக்க, அப்போது கழுத்தில் மணியுடன் அவதரிக்கிறார் மணிகண்டன்.

பந்தள ராஜமன்னன்:

பல காலமாக குழந்தை இல்லாமல் பந்தள மன்னன் ராஜசேகரன் வேதனைக்கு ஆளாகி வந்தார். காட்டுக்கு தனது படையுடன் வேட்டையாடச் சென்ற மன்னன் ராஜசேகரனுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குழந்தை மணிகண்டனைச் சுற்றி புலிகள் அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது.

புலிகள் பாதுகாப்பில் பம்பா நதிக்கரையில் தவழ்ந்த மணிகண்டன், பந்தள மன்னனிடம் வளர வேண்டும் என்பதற்காக புலிகள் விலகிச் சென்றது. அப்போது, பந்தள மன்னன் ராஜசேகரன் மணிகண்டனை எடுத்துச் சென்று தனது மகனாக வளர்க்கிறார்.

ஐயப்பன்:

அப்போது, மன்னனின் மனைவிக்கும் குழந்தை பிறக்கிறது. அப்போது, தன்னுடைய மகனுக்கு மணிகண்டனால் அரசாளும் உரிமை பறிபோகிவிடும் என்ற அச்சம் அரசிக்கு ஏற்படுகிறது. அப்போது, அரசி தனக்கு தலைவலியாக இருப்பதாகவும், தனக்கு புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனுக்கு உத்தரவிடுகிறார்.

காட்டிற்குச் செல்லும் மணிகண்டன் அங்கு அரக்கி மஹிஷியிடம் போர் புரிந்து, அந்த அரக்கியை அழித்து அரக்கியின் உள்ளே இருந்த பெண்ணுக்கு சாப விமோசனம் தருகிறார். அரசி கேட்டது போல புலிப்பாலை புலி வாகனனாகவே கொண்டு வந்து மணிகண்டன் ஐயப்பனாக மாறியதை பார்த்து பந்தள ராஜவம்சமே கைகூப்பி வணங்கினர்.

இரு முடி:

பின்னர், துறவறம் ஏற்று ஐயப்பனாக காட்டிற்கு தவம் செய்ய செல்கிறார். ஆனாலும், அவரை பிரிய பந்தள மன்னன் ராஜசேகரனுக்கு மனமில்லை. இதனால், வருடத்திற்கு ஒரு முறை தான் தவத்தில் இருந்து விடுபடுவதாகவும், அந்த நாள் பந்தள ராஜவம்சம் தரும் மரியாதையை ஏற்பதாகவும் உத்தரவாதம் தருகிறார்.

இதன்காரணமாக வருடத்திற்கு ஒரு முறை மகனை காண தலையில் இரு முடி சுமந்து மன்னன் ராஜசேகரன் சென்றார். ஒரு முடியில் தனக்கு தேவையானவற்றையும், மறுமுடியில் மணிகண்டனுக்கு தேவையானவற்றையும் எடுத்துச் சென்றார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. பின்னர், காலப்போக்கில் மணிகண்டன் தவம் செய்ய அமர்ந்த இடத்தில் சபரிபீடமும், 18 படிகளும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு இரு முடி கட்டி பக்தர்கள் மலையேறுகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம் ஆகும்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி பெருவிழா
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
நவராத்திரி ரகசியம் இதுதான்! ஆண்டுக்கு 4 முறை அம்பிகை வழிபாடு ஏன்?
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
Embed widget