ஆடி அமாவாசை உற்சவம்..! பஞ்சவர்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்
உற்சவம். சிவப்பு வெண்நிறப் பட்டு உடுத்தி சாமந்தி மல்லிகைப்பூ, பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிந்து ஸ்ரீ தேவி, பூதேவி உடன் உலா வந்த வரதராஜ பெருமாள்.
![ஆடி அமாவாசை உற்சவம்..! பஞ்சவர்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள் Kanchipuram Varadaraja Perumal aadi amavasai festival marigolds and pancha colored flowers strolled along TNN ஆடி அமாவாசை உற்சவம்..! பஞ்சவர்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/af9749ff0448381c8836a05372f03b691692200063248113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![ஆடி அமாவாசை உற்சவம்..! பஞ்சவர்ண மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/00bf0c4138d196c8295dd8ed14e29be21692200137095113_original.jpg)
வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன .மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.
இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)