மேலும் அறிய

ஆவி பறக்க கமகமக்கும் பிரியாணி.. முனியாண்டி கோயிலில் ருசியா நடைபெற்ற திருவிழா !

திருமங்கலம் அருகே நடைபெற்ற 90வது ஆண்டு முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா -  2500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பக்தர்களுக்கு விநியோகம்.

வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் 90- ஆவது ஆண்டு பிரியாணி திருவிழாவில், 2500 கிலோ அரிசியில் அண்டா அண்டாவாக அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமங்கலத்தில் நடைபெற்ற பிரியாணி திருவிழா

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோயிலில் முழு உருவ சிலை உள்ள ஒரே கோயில் இதுதான். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களால் கொண்டாடப்படும் திருவிழா இத்திருவிழாவாகும். ஆண்டுதோறும் தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 90வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொள்வர்.
 
சாமி தரிசனம்

இந்நிலையில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை  பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, கொண்டு வரும் பாலைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் கோயில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி இளைஞர்களின் ஆட்டம் பாட்டம் குத்தாட்டத்துடன் ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய்உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.
 
கமகமக்கும் அசைவ பிரியாணி

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் உள்ளிட்ட பலஇடங்களில் இந்த சமூகத்தை (நாயுடு) சேர்ந்த ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ சீரகச்சம்பா அரிசியில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை கொட்டி ஆவி பறக்க கமகமக்கும் அசைவ பிரியாணி இருபதுக்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்தனர்.

பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

அதிகாலை ஐந்து மணிக்கு கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர், பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் வடக்கம்பட்டி, கள்ளிக்குடி, விலலூர், அகத்தாபட்டி, புளியம்பட்டி  உள்ளிட்ட அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் கொட்டும் பனியிலும் விடிய விடிய வரிசையில் காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர். இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின்போது பெண்பார்க்கும் படலமும், பெண் பார்த்து பிடித்து போனவர்களுக்கு உடனடியாக திருமணமும் நடத்தியதும் உண்டு என பக்தர்கள் தெரிவித்தனர்.
 
தலைப்பு செய்திகள்

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடனாக காவடி எடுத்து பரவசம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget