(Source: ECI/ABP News/ABP Majha)
ஆவணி அவிட்டம்; கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பூணூல் போட்ட 100 பேர்
ஆண்டு தோறும் ஆவணி மாத அவிட்டத்தை முன்னிட்டு (விஸ்வகர்மா,செட்டியார், பிராமணர் ) சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் பூணூல் மாற்றுவது வழக்கம்.
ஆவணி அவிட்டம் கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 100க்கும் மேற்பட்டோர் பூணூல் போட்டனர்.
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பூணூல் போட்டனர். ஆண்டு தோறும் ஆவணி மாத அவிட்டத்தை முன்னிட்டு (விஸ்வகர்மா,செட்டியார், பிராமணர் ) சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் பூணூல் மாற்றுவது வழக்கம்.
இந்நிலையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் பிரத்தேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினார். அதைத் தொடர்ந்து மூலவர் சித்தி விநாயகர் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனர்.
உதிரிப்பூக்களால் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு நாமாவளிகள் கூறிய பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.