மேலும் அறிய
T20 World Cup 2021: ஐபிஎல்லில் உள்ளே, டி-20 உலகக்கோப்பையில் வெளியே! மிஸ் செய்த வீரர்கள் யார்?
டி-20 உலகக்கோப்பை
1/5

இந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருதுராஜ், மூன்றில் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடினார். இதில், பெரிதாக சோபிக்காத அவர், 21, 14 ரன்கள் என ஸ்கோர் செய்து ஏமாற்றினார். ருதுவின் ஃபார்ம் ஐபிஎல் தொடரில்தான் அதிரடியாக இருந்ததால், இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கும்போது ரோஹித், ராகுல், இஷானை தேர்வு செய்து கொண்டது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்.
2/5

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பெரும்பாலானோருக்கு ஆச்சர்யமாக இருந்தது ஷிகர் தவான் அணியில் இடம்பெறவில்லை என்பதுதான். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனிலும், அதிரடியாக பேட்டிங் செய்த அவர், ஆரஞ்ச் கேப்புக்கான ரேஸிலும் இருந்தார். 16 இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்திருக்கிறார். எனினும், ஷிகர் தவானை மிஸ் செய்துவிட்டு ரோஹித் ஷர்மா, ராகுல், இஷான் கிஷன் என மூன்று ஓப்பனர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ
3/5

சர்ச்சைக்குரிய பெளலிங் ஆக்ஷன் மற்றும் சில காரணங்களால் 2019-ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வு செய்யப்படாத அவர், டி-20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான ஃபிட்னெஸ் தேர்விலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4/5

2021 ஐபிஎல் சீசனின் ஸ்டார் வீரர் என அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஹர்ஷல் பட்டேல். பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் அவர், ஹாட்-ட்ரிக், பர்பிள் கேப் என இந்த சீசனில் அசத்திவிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ரெக்கார்டுகள் இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவர் விளையாடிய அனுபவம் இல்லாததால் டி-20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்வதை தேர்வு குழு தவிர்த்திருக்கலாம்.
5/5

சிஎஸ்கேவின் மற்றொரு தொடக்க வீரரான டுப்ளெஸி, 16 போட்டிகளில் ஆடி 16 போட்டிகளிலும் பேட்டிங் செய்து 633 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார். இந்த தொடரில் மட்டும் டுப்ளெஸி 6 அரைசதங்களை அடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான் இறுதிப்போட்டியில் 86 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அமைப்பிற்கும் டுப்ளெஸிக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் கேப்டனாக டுப்ளெஸியை டி-20 உலகக்கோப்பைக்கான ஸ்குவாடில் தேர்வு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 18 Oct 2021 01:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















