மேலும் அறிய
Shubman Gill : கடைசி நேரத்தில் சுப்மன் கில்லுக்கு நடந்த சோகம்.. அவருக்கு பதில் களத்தில் இறங்கப்போவது யார்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் இறங்குவது சந்தேகமாகியுள்ளது.

சுப்மன் கில்
1/6

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சென்னை சேப்பாக்கத்தில் மோத உள்ளன.
2/6

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடனான இந்தியாவின் முதல் போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
3/6

ஆஸ்திரேலிய அணிக்கு எந்த வகையிலும் சலைத்ததில்லை என்ற அடிப்படையில் சமபலத்துடன் இந்திய அணியும் களமிறங்குகிறது. இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
4/6

இதற்கிடையில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
5/6

அவர் நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கில் இறங்காத நிலை ஏற்பட்டால் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் ஓபனிங் பேட்ஸ் மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6

கில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தால், அது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படும்
Published at : 06 Oct 2023 04:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement