மேலும் அறிய

Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?

Government employees Old Pension:   அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த முடிவும் எட்டபடாத சூழலில் வரும் டிசம்பர் 29 அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் எனவும், ஜனவரி 6ஆம் தேதி  முதல் காவரையற்ற வேலை நிறுத்தம்  போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் எனவும் போட்டா ஜியோ தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் போராட்டம்

அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதில் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டமாகும். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் இது தொடர்பாக அடுத்தக்கட்ட முடிவுகள் வெளியாகாத நிலையில், 1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும்.

அரசு ஊழியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TETதேர்விலிருந்து விலக்களித்து)ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு. முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தைைமயாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை  வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரசு ஊரியர்களின் கோரிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. 

அமைச்சர்களோடு ஆலோசனை

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் , முதல்வரின் ஒப்புதலின் பெயரில் அமைச்சர் குழு சங்கங்களின் கோரிக்கையை முழுமையாக தெரிவித்தோம் பொங்கலுக்கு முன்பாக நல்ல தீர்வை அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக இந்த கூட்டம் நடத்திய விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை . அரசால் அங்கீகரிக்கபட்ட சங்கங்கள் எல்லாம் உள்ளது அவர்களை அழைக்காமல் மூன்று பேர் ஐந்து பேர் உள்ள சங்கங்களை அழைத்து உள்ளனர். இந்த பட்டியலை தயாரித்தது யார் இதன் மூலம் முதல்வரை அமைச்சரை அவமதிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். 

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும்

தொடர்ந்து பேசிய அவர்,  இன்றைய கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த முடிவும் எட்டபடாத சூழலில் வரும் டிசம்பர் 29 அன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தவர், ஜனவரி 6ஆம் தேதி  முதல் காவரையற்ற வேலை நிறுத்தம்  போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என கூறினார்கள். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என உறுதியாக தெரிவித்தார். எங்களது கோரிக்கை தொடர்பாக எந்த வித உத்தரவாதமும் அமைச்சர்கள் குழு அளிக்காத நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என அமிர்தகுமார் தெரிவித்தார். இதே போல அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று மாலை தங்களது ஆலோசனை குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!
புதுச்சேரி மக்களே கவனம்! தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்!
புதுச்சேரி மக்களே கவனம்! தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - புதிய கட்டுப்பாடுகள் முழு விவரம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Embed widget