மேலும் அறிய
Murali Vijay : டெஸ்ட் நாயகன் முரளி விஜய்க்கு பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டை சேர்ந்த முரளி விஜய் தனது 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முரளி விஜய்
1/6

முரளி விஜய் 1984 ஏப்ரல் 1ஆம் தேதியன்று பிறந்தார். இவர் முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார் வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் 2018 வரை இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டகாரர்ராக இருந்தார்
2/6

12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து 17 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய முரளி விஜய் தமிழ்நாடு 22 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகினார்.
3/6

முரளி விஜய் 2006 இல் தமிழ்நாடு சீனியர் அணிக்காக விளையாடினார் 2006-07 ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார். தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைலை வைத்து அனைவரையும் கவர்ந்தார்.
4/6

அக்டோபர் 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெளதம் கம்பீருக்கு பதில் இவர் தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் சோர்ப்ப ரன்களை மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஜொலிக்கும் வீரராக இருந்தார் முரளி விஜய்
5/6

அதைபோல் முரளி விஜய்க்கு ஐபிஎலில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 106 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2619 ரன்கள் எடுத்துள்ளார். 121.87 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முரளி ஐபிஎலில் இரண்டு சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடித்துள்ளார்.
6/6

30 ஜனவரி 2023 அன்று விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்று அவர் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
Published at : 01 Apr 2023 02:17 PM (IST)
Tags :
Murali Vijayமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கோவை
மயிலாடுதுறை
Advertisement
Advertisement






















