மேலும் அறிய
Virat Kohli pics: “மீண்டும் பெங்களூருவில்...” பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாரான கோலி
விராட் கோலி
1/6

இந்தியாவும் இலங்கையும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. பெங்களூரில் அமைந்துள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
2/6

. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 15வது டெஸ்ட் தொடர் வெற்றி ஆகும்.
3/6

இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2012-13ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தொடரை இழந்து தோல்வி அடைந்திருந்தது
4/6

இதற்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது.
5/6

இந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக 2016 முதல் 2020 காலகட்டத்தில் அதாவது 42 மாதங்கள் இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. இந்த காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி பொறுப்பு வகித்தார்.
6/6

இந்நிலையில், “மீண்டும் பெங்களூருவில்” என கேப்ஷன் பதிவிட்டு விராட் கோலி பயிற்சி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்
Published at : 12 Mar 2022 06:56 AM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















