மேலும் அறிய
IndvsPak: மவுக்கா.. மவுக்கவுக்கு எண்ட் போட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி - கிரிக்கெட் க்ளிக்ஸ்
இந்தியா vs பாகிஸ்தான்
1/6

டி-20 உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டி. உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த போட்டி. கடந்த 29 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த இந்திய அணிக்கு ஏமாற்றம் ஒரு புறம். இன்னொரு புறம், பாகிஸ்தானுக்கு இது வரலாற்று வெற்றி.
2/6

உண்மையில், நேற்றைய போட்டி முடிவு இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருக்க வேண்டியது. ஆனால், பாகிஸ்தான் வென்றதை கொண்டாடினர், கிரிக்கெட்டை, விளையாட்டை மதித்தனர். பாகிஸ்தான் வென்றது பிடித்திருந்தற்கான காரணம், இந்திய அணியும் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, பாகிஸ்தானும் எளிதாக வென்றுவிடவில்லை.
3/6

கிரிக்கெட்டைப் பார்க்க முடிந்தது, போராட்டத்தை பார்க்க முடிந்தது. கடைசியில், சிறப்பாக விளையாடிய அணி வெற்றியைத் தட்டிச் சென்றது.
4/6

போட்டி முடிந்து, போஸ்ட் மேட்ச் ப்ரசண்டேஷன் முடிந்த பிறகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தோனியிடம் உரையாடி கொண்டிருந்தனர். வழக்கம் போல தோனியைச் சுற்றி வீரர்கள் நின்றிருந்த தருணம் விளையாட்டில் 'Spirit of Cricket' இருந்ததை உறுதிப்படுத்தியது.
5/6

இரு நாட்டு வீரர்களின் ஸ்ப்ரிட் ஆஃப் கிரிக்கெட், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது, பாடமாக அமைந்தது. வெற்றி. தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம் என்பதை உணர்த்தியது.
6/6

29 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது பாகிஸ்தான் அணி
Published at : 25 Oct 2021 02:13 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
கல்வி
சென்னை
கல்வி
Advertisement
Advertisement





















