மேலும் அறிய
Dharmapuri School Election: ஒரு விரல் புரட்சியே..தேர்தல் ஆணைய விதிமுறையின்படி நடைபெற்ற அரசு பள்ளி மாணவர் மன்ற தேர்தல்..வைரலாகும் மாணவ-மாணவியரின் புகைப்படங்கள்!
Dharmapuri School Election: தேர்தல் ஆணைய விதிமுறையின்படி நடைபெற்ற அரசு பள்ளி மாணவர் மன்ற தேர்தலில் வாக்களித்த மாணவ மாணவிகளின் வைரல் புகைப்படங்கள் இதோ..!

மாணவர் தேர்தல்
1/6

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த உம்மியம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 340-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு கல்வியோடு, வாழ்வியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை கற்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
2/6

இந்தப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்கள் தலைவரை தேர்ந்தெடுக்க மாணவர் மன்ற தேர்தல் நடத்தி, தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டும், 14 துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பணிகளை பிரித்து கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
3/6

இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுக்க மாணவர் மன்றத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கலோடு தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு, பள்ளியிலேயே நடைபெற்றது.
4/6

இந்த வாக்குப்பதிவிற்கு வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 வேட்பாளர்களுக்கான சின்னங்களை ஒதுக்கி, 266 மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.
5/6

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பணி என்னென்ன என்பதை மாணவர்களுக்கு பள்ளிப்பருவத்திலே தெரியப்படுத்த முடியும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளின் படி இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
6/6

மேலும் தேர்தலில் வாக்களித்த மாணவ, மாணவிகள் நேர்மையானவர்களை, நல்ல வாக்குறுதி கொடுத்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். இவ்வாறு தங்கள் பிஞ்சு விரல்களில் மையிட்டு கொண்டு வாக்களிக்கும் தருமபுரி பள்ளி மாணவ-மாணவிகளின் புகைப்படங்கள் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Published at : 29 Jul 2023 12:42 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion