மேலும் அறிய
CM Stalin Honours Scientists : தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை கெளரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
CM Stalin Honours Scientists : இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்துள்ளார்.

ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் விழா
1/7

விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
2/7

உயர் கல்வித்துறையின் சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
3/7

இந்த பாராட்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.
4/7

இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5/7

முதல்வர் ஸ்டாலின், இஸ்ரோ விண்வெளிகளுடன் கலந்துரையாடிய போது...
6/7

ராக்கெட், லேண்டர் மாதிரிகளுக்கு மத்தியில் நின்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
7/7

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ வேலு, பொன்முடி, துரைமுருகன்.
Published at : 02 Oct 2023 01:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement