மேலும் அறிய
Advertisement

MK stalin : ‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..’ சிங்கப்பூரிலிருந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
சிங்கப்பூருக்கான இந்திய தூதர் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.

சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின்
1/6

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிற்கு செல்லவிருந்தார்.
2/6

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, த.மோ. அன்பரசன் மற்றும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும், எம்.பிக்கள் ஆ.ராசா மற்றும் தயாநிதிமாறன் ஆகியோரும் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
3/6

இந்நிலையில் அவர் தற்போது அங்கு சென்றடைந்துள்ளார். அவரை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் வரவேற்றனர்.
4/6

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், அரசு முறை பயணமாக சிங்கப்பூருக்கு வருகை தந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினை, டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. சுதர்சன் வேணு அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
5/6

அரசுமுறை பயணமாக விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நாளை வரை தங்கியிருக்கிறார்.
6/6

அங்கிருந்து மே 25-ல் ஜப்பான் செல்கிறார். அங்கு 6 நாட்கள் வரை தங்கியிருக்கும் அவர், மே 31-ல் சென்னை திரும்புகிறார்.
Published at : 23 May 2023 07:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion