மேலும் அறிய
CM Stalin : தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin : காலையில் முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைப்பயிற்சி செய்தார். மேலும், அத்தொகுதியில் நிற்கும் முரசொலிக்கு காமராஜ் காய்கறி மார்கெட்டில் வாக்கு சேகரித்தார்.

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின்
1/7

2024 பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
2/7

கடந்த வாரம் தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை நாள் என மக்களவை தேர்தலுக்குரிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
3/7

தமிழகம் மற்றும் புதுவையில் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கும் அத்தேர்தலுக்கு போட்டியிடும் கூட்டணிகளில் இருந்து வாக்காளர் பட்டியலும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியானது.
4/7

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திருச்சி சென்று இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவே அவர் தஞ்சாவூர் சென்றடைந்தார்
5/7

இன்று காலை தஞ்சாவூரில் நடைப்பயிற்சி செய்தார். மேலும், அத்தொகுதியில் நிற்கும் முரசொலிக்கு காமராஜ் காய்கறி மார்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
6/7

முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடனிருந்தார்.
7/7

மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 23 Mar 2024 11:29 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion