மேலும் அறிய
Maatu Pongal 2024 : தமிழ்நாட்டின் கோயில்களிலும் களைகட்டும் மாட்டுப்பொங்கல்!
Maatu Pongal 2024 : மாட்டுப் பொங்கலையொட்டி, கோயில்களில் உள்ள நந்தி சிலைகளுக்கும் மாட்டுத்தொழுவில் இருக்கும் மாடுகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் மாட்டுப்பொங்கலையொட்டி சிறப்பு அலங்காரம்
1/6

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு உண்ணாமலை அம்மன் ஆகிய அண்ணாமலையார் சூரிய பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
2/6

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
3/6

மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, பூ, பழங்கள், இனிப்புகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
4/6

தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபால சாமி தம்பிரான் மாட்டுதொழுதான் இது (மாடுகளுக்கென அமைக்கப்பட்ட கோயில்)
5/6

பட்டத்து காளைக்கு ராஜ அலங்காரம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்
6/6

கம்பம் நந்தகோபால சாமி தம்பிரான் மாட்டுதொழுவில் இருந்த மற்ற பசுக்களுக்கும் காளைகளுக்கும் பொது மக்கள் அகத்திக்கீரை கொடுத்தனர்.
Published at : 16 Jan 2024 11:42 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement