மேலும் அறிய
Michaung Cyclone Effects : சின்னாபின்னமான திமுக கோட்டை.. மிக்ஜாம் புயல் செய்த வேலையை பார்த்தீங்களா?
Michaung Cyclone Effects : மிக்ஜாம் புயலால் பெய்த தொடர் மழையாலும் பலத்த காற்றாலும் சென்னை சைதாப்பேட்டை பகுதி பாதிப்பிற்கு உள்ளானது.

சைதாப்பேட்டையில் சூழ்ந்த வெள்ளம்
1/7

2015 ஆம் ஆண்டில் பெய்த தொடர் மழையால் சென்னை மாநகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின், மிக்ஜாம் புயலால், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது.
2/7

இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. 2015 ஆம் ஆண்டில் சேதத்திற்கு உள்ளான அனைத்து பகுதிகளும் இந்தமுறை இரண்டு மடங்காக பாதிப்பு அடைந்தது.
3/7

குறிப்பாக திங்கட்கிழமை காலையில் ஒரு சில மணி நேரங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டு போனது.
4/7

திமுக கோட்டை என்று அழைக்கப்படும் சைதாப்பேட்டையிலும், மழை நீர் தேங்கியது.
5/7

தார் சாலையாக இருந்த தெருக்கள், தண்ணீர் சாலையாக மாறியது. இதனால் இருசக்கர வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. அத்துடன் கார்களும் சேதத்திற்கு உள்ளானது.
6/7

மழையுடன் பலத்த காற்று அடித்ததால், மரங்கள் முறிந்து சாலைகளில், போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின் இருக்கும் ஸ்ரீநகர் காலனிதான் இது...
7/7

மறைமலை அடிகளார் பாலத்தின் அருகே இருக்கும் அடையாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பாலத்தில் நின்று பல மக்கள் ஆறை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
Published at : 05 Dec 2023 10:29 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion