மேலும் அறிய
Ginger:தினமும் இஞ்சி சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
தினமும் இஞ்சி சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நிபுணர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம்.

இஞ்சி
1/5

உணவில் தினமும் இஞ்சி சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். இஞ்சி ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இஞ்சி,சுக்கு, அப்படியே அல்லது பொடி செய்து டீ, உணவுகளில் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2/5

செரினா மண்டலம் சீராக இருக்க இஞ்சி சாப்பிடுவது உதவும். வயிற்றுப் பகுதியில் உள்ள என்சைம் சுரப்பை சீர்ப்படுத்தும். செரிமானத்தை துரிதப்படுத்தும். நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும். ஒரு கப் இஞ்சி டீ அல்லது சிறிய துண்டு இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும்.
3/5

இஞ்சியில் ’gingerol’ பயோ ஆக்டிவ் காம்போனண்ட்ஸ் இருப்பதால் ஆன்டி-இன்ஃபளமேட்ரி ஆக செயல்படுகிறது.இதய ஆரோக்கியம் மேம்பட உதவும். வாந்தி, குமட்டல் உள்ளிட்டவற்றை போக்க இஞ்சி சாப்பிடுவது பயனளிக்கும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் உடல்நலத்திற்கு நன்மைகள் உண்டு.
4/5

இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அடிக்கடி உடல் நல கேடு, சளி, காய்ச்சல் ஏற்படுவர்கள் இஞ்சி டீ பருகினால் உடல்நிலை சரியாகும். இது பாக்டீரியல் தொற்றை எதிர்த்து போராடும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
5/5

உடல் எடையை நிர்வகிக்க, குறைக்க இஞ்சி சாப்பிடுவது உதவும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும். அப்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவது துரிதப்படும்.
Published at : 22 Sep 2024 01:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion