மேலும் அறிய
Plain Salna : சால்னா.. சால்னா.. இட்லி, சப்பாத்தி, பரோட்டா..சூப்பர் சாய்ஸ் - ரெசிபி!
Plain Vegetable Salna : சுவையான சைவ கெட்டி சால்னா எப்படி செய்வதென்று பார்க்கலாம்..

ப்ளெயின் சால்னா
1/5

முதலில் கசகசா மற்றும் முந்திரி பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
2/5

இப்போது அடுப்பில் ஒரு குக்கர் வைத்து, தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி, ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து வதக்க வேண்டும்.
3/5

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகுமளவுக்கு நன்றாக வதக்கி விடுங்கள்
4/5

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் கசகசா மற்றும் முந்திரியை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தோலுரித்த சின்ன வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக, அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
5/5

குக்கரில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கறி மசாலாத்தூள் ஆகியவற்றை மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ்ஷான கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கி விட வேண்டும். இலைகள் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை இதனுடன் சேர்க்க வேண்டும்.ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து மூடி போட்டு ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துக்கொள்ளலாம்.
Published at : 16 Jan 2024 12:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement