மேலும் அறிய
Sprouted Green Gram Dosa : சத்துகள் நிறைந்த ஆந்திரா ஸ்டைல் முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை..இன்றே செய்யுங்க!
Sprouted Green Gram Dosa : சுவையும் சத்துக்களும் நிறைந்த ப்ரேக்ஃபாஸ்ட் செய்யனுமா? அப்போ இந்த முளைகட்டிய பச்சைப்பயிறு தோசையை செய்யுங்கள்.

முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை
1/6

தேவையான பொருட்கள் : பச்சைப்பயிறு - 1 கப், பச்சரிசி - 50 கிராம் (1 மணிநேரம் ஊறவைத்தது), பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கல் உப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு, தண்ணீர், நெய்.
2/6

செய்முறை: முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி 12 மணிநேரம் ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி பயிரை துணியில் கட்டி 12 மணிநேரம் வைக்கவும்.
3/6

அடுத்து அரிசியை 1 மணிநேரம் ஊறவைக்கவும். பின்பு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும்.
4/6

பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
5/6

பிறகு தோசைக்கல்லை சூடு செய்து அதில் மாவை ஊற்றி தேய்க்கவும். பின்பு சுற்றிலும் நெய் ஊற்றி தோசை வெந்ததும் சூடாக பரிமாறவும்.
6/6

அவ்வளவு தான் மொறு மொறு பச்சைப்பயறு தோசை தயார்!
Published at : 28 Jan 2024 09:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement