மேலும் அறிய
Kasi Halwa : பூசணிக்காய் இருக்கா..? அப்போ இந்த சுவையான காசி அல்வா செய்து பாருங்கள்!
Kasi Halwa : குழந்தைகள் பூசணிக்காய் சாப்பிட மறுக்கிறார்களா..? கவலை வேண்டாம்..இந்த காசி அல்வா செய்து கொடுங்கள்..மறுக்காமல் சாப்பிடுவார்கள்.

காசி அல்வா
1/6

தேவையான பொருட்கள் : பூசணிக்காய் - 3 1/2 கப் துருவியது, சர்க்கரை - 1 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, முந்திரி பருப்பு , காய்ந்த திராட்சை, நெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள் புட் கலர்
2/6

செய்முறை: முதலில் ஒரு பானில் நெய் சேர்த்து, முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் வறுத்து வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பூசணிக்காயை நறுக்கி, விதைகளை நீக்கி துருவவும். பின்பு ஒரு வடிகட்டி வைத்து அதில் உள்ள நீரை வடிகட்டவும்.
3/6

ஒரு அகலமான பானில் துருவிய பூசணிக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பின்பு அதை 15 நிமிடம் வேகவிடவும். காய் நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். அடுத்து ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
4/6

சர்க்கரை நன்கு கரைந்ததும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு மஞ்சள் புட் கலர் சேர்த்து கலந்து விடவும்.
5/6

அடுத்து வறுத்த முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை மற்றும் நெய் சேர்த்து கலந்து விடவும்.
6/6

அவ்வளவு தான் அருமையான காசி அல்வா தயார்.
Published at : 21 Mar 2024 10:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion