மேலும் அறிய
Masala Noodles Recipe : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் அசத்தலான மசாலா நூடுல்ஸ் ரெசிபி..!
Masala Noodles Recipe : நூடுல்ஸை எப்போது ஒரே மாதிரி செய்து சலித்து விட்டதா..? அப்போ இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்..!

மசாலா நூடுல்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : ரமேன் நூடுல்ஸ் - 4 பாக்கெட், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 2 தேக்கரண்டி நறுக்கியது, இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது, வெங்காயம் - 1/2 நறுக்கியது, கேரட் - 1/2 கப் நறுக்கியது, முட்டைகோஸ் - 1/2 கப் நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது, பச்சை குடைமிளகாய் -1/4 கப் நறுக்கியது, உப்பு - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1/2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 2 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள்.
2/6

செய்முறை: முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸை சேர்த்து வேகவிடவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
3/6

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும்.
4/6

பிறகு நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கலந்துவிடவும்.
5/6

பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸை சேர்த்து கலந்துவிடவும்.
6/6

கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மசாலா நூடுல்ஸ் தயார்!
Published at : 26 Nov 2023 01:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement