மேலும் அறிய
Paneer Manchurian Recipe : காரசாரமான பன்னீர் மன்சூரியன்..சூப்பரான சைட் டிஷ்ஷை இன்றே செய்யுங்க!
Paneer Manchurian Recipe : அசத்தலான ஒரு சைட் டிஷ் செய்யனுமா..? அப்போ யோசிக்காம இந்த பன்னீர் மஞ்சூரியன் ரெசிபியை ட்ரை செய்து அசத்துங்கள்.

பன்னீர் மஞ்சூரியன்
1/6

தேவையான பொருட்கள் : பன்னீரை பொரிப்பதற்கு : பன்னீர் - 400 கிராம், மைதா - 2 தேக்கரண்டி, சோள மாவு - 4 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் - பொரிப்பதற்கு. பன்னீர் மஞ்சூரியன் செய்ய : எண்ணெய் - 3 தேக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, வெங்காயம் - 1 நறுக்கியது, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, தக்காளி கெட்சப் - 1/2 கப், சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, தண்ணீர், சோளமாவு கலவை - 1/2 கப், வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை.
2/6

செய்முறை: முதலில் பன்னீரை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
3/6

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரிக்கவும். அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
4/6

பின்பு மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் கலக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
5/6

பிறகு சோளமாவு கலவையை சேர்த்து கலந்து விடவும். பொரித்த பன்னீரை சேர்த்து கலந்து விட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.
6/6

அவ்வளவுதான் சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார்!
Published at : 29 Dec 2023 04:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement