மேலும் அறிய
Omam Biscuit Recipe : செரிமானத்திற்கு உதவும் ஓமம் பிஸ்கட்..இன்றே வீட்டில் செய்யுங்கள்..!
Omam Biscuit Recipe : செரிமான பிரச்சினைகளை நீக்க உதவும் இந்த ஓமம் பிஸ்கட்டை இன்றே வீட்டில் செய்து பாருங்கள்.

ஓமம் பிஸ்கட்
1/6

தேவையான பொருட்கள் : மைதா - 2 கப், சர்க்கரை - 6 மேசைக்கரண்டி பொடித்து, பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை, வெண்ணை - 3 மேசைக்கரண்டி, பால் - 1/2 கப்.
2/6

செய்முறை : முதலில், மிக்ஸியில் சர்க்கரை போட்டு, பொடித்து கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில், மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், ஓமம், உப்பு, வெண்ணை சேர்த்து பிசையவும். வெண்ணை மிருதுவாக இருக்க வேண்டும்.
3/6

அடுத்து இதில் பால் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 40 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
4/6

ஊறிய மாவை சிறிது கனமாக தேய்த்து , விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
5/6

வெட்டிய மாவை, அவனில் வைத்து 180 சூட்டில், 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
6/6

அவ்வளவு தான் சுவையான ஓமம் பிஸ்கட் தயார்.
Published at : 13 Nov 2023 04:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement