மேலும் அறிய
Murukku Recipe: தீபாவளி பண்டிகை - பொட்டுக்கடலை முறுக்கு செய்து அசத்துங்க! - இதோ ரெசிபி!
Murukku Recipe: பொட்டுக்கடலை முறுக்கு எப்படி செய்வது என்பதை காணலாம்.

முறுக்கு
1/5

தீபாவளி வந்தாச்சு. பண்டிகைகால உணவு வகைகளாக என்னென்ன செய்யலாம் என்று திட்டமிடல் இருக்கா. பொட்டுக்கடலை முறுக்கு செய்து அசத்துங்க.
2/5

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை -1 கப், பெருங்காயத்துாள் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் -2 மேஜை கரண்டி, எள் -1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
3/5

பொட்டுக் கடலையை வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.
4/5

இத்துடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம், சீரகம், எள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பின், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, மாவு பதத்திற்கு பிசையவும்
5/5

இம்மாவை முறுக்கு நாழியில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
Published at : 21 Oct 2024 11:32 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement