மேலும் அறிய
Toor Dal Kebab : சைவம் சாப்பிடுபவர்களுக்கான சூப்பரான சிற்றுண்டி.. பருப்பு கபாபை செய்து அசத்துங்க!
Toor Dal Kebab : உங்களுக்கு கபாப் ரொம்ப பிடிக்குமா? அப்போ ஒரு முறை இந்த துவரம் பருப்பு கபாபை சுவைத்து பாருங்க.

துவரம் பருப்பு கபாப்
1/6

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு- 2 கப், வெங்காயம் - 1 , பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 3 , உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு - 1 டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
2/6

செய்முறை: முதலில் துவரம் பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற எடுத்துக் கொள்ளவும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
3/6

அடுத்தது துவரம் பருப்போடு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், சிவப்பு மிளகாய் துகள்கள், சீரகத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
4/6

கடைசியாக சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
5/6

அடுத்தது கலந்து வைத்துள்ள மசாலாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த மாவை உள்ளங்கையில் வடை போன்று தட்டிக்கொள்ளவும்
6/6

அடுத்தது ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை போல் தட்டி வைத்துள்ள மாவை இருபுறம் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான துவரம் பருப்பு கபாப் தயார்.
Published at : 23 Jul 2024 01:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion