மேலும் அறிய
Badam Kheer : வாயில் கரையும் பாதாம் கீர்.. போர் அடிச்சா செய்து பாருங்க!
Badam Kheer : மழையும் வெயிலும் மாறி வரும் இந்த கிளைமேட்டில் சுவையான பாதம் கீர் செய்து குடித்து பாருங்க அட்டகாசமா இருக்கும்.

பாதாம் கீர்
1/6

தேவையான பொருட்கள் : ஊறவைத்த பாதாம் - 1 கப், பால் - 1 லிட்டர், குங்குமப்பூ, ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்.
2/6

செய்முறை : பாதாம் பருப்பை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது பாதாம் தோலை நீக்கி மிக்சி ஜாரில் சேர்த்து இதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
4/6

அடுத்தது கடாயில் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் குங்குமப்பூவை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
5/6

அடுத்தது அரைத்த பாதாம் விழுதை, ஏலக்காய் தூள் சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
6/6

அடுத்தது கன்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான பாதாம் கீர் தயார். உங்கள் வசதிக்கேற்ப சூடாகவோ, குளிரூட்டியோ குடிக்கலாம்.
Published at : 07 Sep 2024 01:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஐபிஎல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion