Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் அறிமுகமாகியுள்ள மஹிந்த்ராவின் XUV 7XO, போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Mahindra XUV 7XO Vs Rivals: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் மஹிந்த்ராவின் புதிய XUV 7XO காரானது, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
மஹிந்த்ரா XUV 7XO Vs போட்டியாளர்கள்:
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆன XUV 700 ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு, XUV 7XO என்ற பெயரில் டீப்ராண்ட் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையி இந்த காரானது நன்கு பரிட்சயமான, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது. இந்நிலையில் இந்த மூன்று கார்களும் டிசைன், அம்சங்கள், வசதிகள், செயல்திறன் மற்றும் விலை அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று எப்படி போட்டியிடுகின்றன என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
XUV 7XO Vs அல்கசார் Vs ஹெக்டர் - டிசைன்:
காரின் டிசைன் என்பதில் ஒவ்வொருவருக்கு ஒரு விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு இருக்கலாம். அந்த வகையில் தான் இந்த மூன்று எஸ்யுவிக்களுமே வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளன. அந்த வகையில் டிசைன் அடிப்படையில் மட்டுமே ஒரு காரை தேர்வு செய்ய வேண்டுமானல், இதில் அல்கசார் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். வலுவான வடிவமைப்பு, க்ளீன் லைன்கள், கம்பீரமான தோற்றம் ஆகியவை கவனத்தை ஈர்க்கும். அதேநேரம், இந்த பிரிவில் சற்று பிரீமியமாக உள்ள டாடாவின் சஃபாரி, டிசைன் அடிப்படையில் முதன்மையான மாடலாக உள்ளது.
XUV 7XO Vs அல்கசார் Vs ஹெக்டர் - அம்சங்கள்
| அம்சங்கள் | XUV 7XO | அல்கசார் | ஹெக்டர் ப்ளஸ் |
|---|---|---|---|
| ஸ்க்ரீன் செட்-அப் | மூன்று 12.3-இன்ச் HD திரைகள் | இரண்டு 10.25 இன்ச் திரைகள் | 14-இன்ச் டச்ஸ்க்ரீன் |
| ஆண்ட்ராய்ட் ஆட்டோ / ஆப்பிள் கார்ப்ளே | வயர்லெஸ் | வயர்லெஸ் | ஆம் |
| கனெக்டட் தொழில்நுட்பம் | அட்ரினோஎக்ஸ் + அலெக்சா (60+ செயல்பாடுகள்) | கனெக்டட் கார் தொழில்நுட்பம் | ஐ-ஸ்மார்ட் சிஸ்டம் |
| சன்ரூஃப் | ஸ்கைரூஃப் | பனோரமிக் சன்ரூஃப் | பனோரமிக் சன்ரூஃப் |
| வெண்டிலேடட் சீட்ஸ் | முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் | முன் மற்றும் இரண்டாவது வரிசை (கேப்டன் இருக்கைகள்) | முன் இருக்கைகள் |
| பவர் டிரைவர் சீட் | ஆம் (மெமரி ஃபங்க்சனுடன்) | ஆம் (மெமரி ஃபங்க்சனுடன்) | - |
| இருக்கை விருப்பங்கள் | 6 மற்றும் 7 இருக்கைகள் | 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்டவை | 5, 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்டவை |
| ADAS | லெவல் 2 | லெவல் 2 | லெவல் 2 |
| கேமரா | 540-டிகிரி கேமரா | 360-டிகிரி கேமரா | 360-டிகிரி கேமரா |
| ஏர்பேக்குகள் | 6 | 6 (ஸ்டேண்டர்ட்) | 6 |
| பிரீமியம் டச் | லெதரெட் பேக், DVR, ஏர் ஃபில்டர் | பாஸ் பயன்முறை, மடிக்கணினி தட்டு | கெஸ்டர் கன்ட்ரோல்ஸ், ஹார்மன் ஆடியோ |
XUV 7XO Vs அல்கசார் Vs ஹெக்டர் - பவர்ட்ரெயின்
சொகுசு வசதி மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை தாண்டி எந்த கார் சிறந்தது என்பது, இந்த இடத்தில் தான் தேர்வாகிறது. செயல்திறன் அடிப்படையில் இங்கு XUV 7XO முற்றிலுமாக முன்னிலை வகிக்கிறது. பெரிய இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டு அதிகப்படியான ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
| எஸ்யூவி | இன்ஜின் ஆப்ஷன்கள் | பவர் | டார்க் | ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் |
|---|---|---|---|---|
| XUV 7XO | 2.0லி டர்போ பெட்ரோல், 2.2லி டர்போ டீசல் | 200 ஹெச்பி, 185 ஹெச்பி | 380 என்எம், 450 என்எம் | மேனுவல் / ஆட்டோமேடிக் |
| அல்கசார் | 1.5லி டர்போ பெட்ரோல்/1.5லி டீசல் | 160 பிஎஸ்/116 பிஎஸ் | 253 என்எம்/250 என்எம் | 6-MT, 7-DCT (பெட்ரோல்), 6-MT, 6-AT (டீசல்) |
| ஹெக்டர் ப்ளஸ் | 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் | 141 பிஎச்பி | 250 என்.எம். | கையேடு / CVT |
XUV 7XO Vs அல்கசார் Vs ஹெக்டர் - விலை
| எஸ்யூவி | தொடக்க விலை (எக்ஸ்-ஷோரூம்) | அதிகபட்ச விலை (எக்ஸ்-ஷோரூம்) |
|---|---|---|
| மஹிந்திரா XUV 7XO | ரூ.13.66 லட்சம் | ரூ.22.47 லட்சம் |
| ஹூண்டாய் அல்கசார் | ரூ.14.99 லட்சம் | ரூ. 21.40 லட்சம் |
| எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் | ரூ.11.99 லட்சம் | ரூ.18.99 லட்சம் |
XUV 7XO Vs அல்கசார் Vs ஹெக்டர் - எது பெஸ்ட்?
- தரவுகளை ஒப்பிட்டு பார்த்தால், XUV 7XO, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் சார்ந்த SUV ஆக வலுவான நிலையை கொண்டுள்ளது. அம்சங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நபர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
- ஹூண்டாய் அல்கசார் மிகவும் சீரான மற்றும் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், நடைமுறைத்தன்மைக்கு உகந்ததாகவும் உள்ளது.
- ஒப்பீட்டளவில் அணுகக்கூடிய விலையில் அம்சங்கள் நிறைந்த கேபின் மற்றும் வசதியான ஓட்டுநர் அனுபவத்தை கருத்தில் கொள்பவர்களுக்கு MG ஹெக்டர் ப்ளஸ் ஒரு உறுதியான தேர்வாக உள்ளது





















