மேலும் அறிய
Sweet Corn Pulao : ஸ்வீட் கார்னில் புலாவ்.. செய்து பாருங்க வேற மாதிரி இருக்கும்!
Sweet Corn Pulao: இந்த டேஸ்டியான ஸ்வீட் கார்ன் புலாவை வெறும் 30 நிமிடத்தில் செய்து விடலாம்.

ஸ்வீட் கார்ன் புலாவ்
1/6

தேவையான பொருட்கள்: சோள முத்துக்கள் - 180 கிராம், நெய் - 2 மேசைக்கரண்டி, ஏலக்காய் - 3 ,பட்டை - 1 துண்டு, கிராம்பு -4, அன்னாசிப்பூ - 1, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, உப்பு, பாஸ்மதி அரிசி - 1 கப், தேங்காய் பால் - 1 கப்.
2/6

செய்முறை : முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஸ்வீட் கார்னை சேர்த்து 2 விசில் வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது குக்கரில் மீண்டும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
4/6

அடுத்தது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும்.
5/6

அடுத்தது வேகவைத்த ஸ்வீட் கார்னை வெங்காயத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும். அடுத்தது பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறிவிடவும்.
6/6

அடுத்தது ஒரு கப் தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து மிதமான சூட்டில் 2 விசில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் புலாவ் தயார்
Published at : 10 Sep 2024 11:58 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion