மேலும் அறிய
Cooking Tips : தேங்காய் சட்னி மீந்து போச்சா? இதை சேர்த்தால் மோர் குழம்பாகிவிடும்!
Cooking Tips : காலையில் அதிகமாக தேங்காய் சட்னி செய்துவிட்டால் கவலை வேண்டாம். ஒரு சில பொருட்களை சேர்த்தால் மதியத்திற்கு மோர் குழம்பு ரெடியாகிவிடும்.
சமையல் குறிப்புகள்
1/6

தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய் தண்ணீரையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
2/6

தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், சீரகப்பொடி சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதன் பிறகு பெருங்காய பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து 5 நிமிடத்திற்கு அடுப்பிலிருந்து இறக்கினால் மோர் குழம்பாக மாறிவிடும்.
3/6

பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவை சேர்த்து இறுக்கமாக மாவு பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
4/6

தேங்காய், வர மிளகாய், வெந்தயம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மல்லி அனைத்தையும் வறுத்து பொடியாக அரைத்து சாம்பார் இறக்கும் முன் தூவிவிட்டால் சாம்பார் சுவையாக இருக்கும்.
5/6

பூரிக்கு மாவு பிசையும் போது நல்ல இறுக்கமாக பிசைந்து சீக்கிரமாக பூரி சுட வேண்டும். சப்பாத்தி மாவு பிசையும் போது சாப்டாக மாவு பிசைந்து ஊறவைத்து சப்பாத்தி செய்ய வேண்டும்.
6/6

சர்க்கரை சேர்த்து ஏலக்காவை பொடியாக அரைத்து கொண்டால் பாயாசம் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
Published at : 22 Jun 2024 01:04 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
Advertisement
Advertisement




















