மேலும் அறிய

Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை

Honda 0 Alpha SUV EV: ஹோண்டா நிறுவனத்தின் 0 ஆல்பா மின்சார எஸ்யுவியின், நாடு முழுவதற்குமான சாலை பரிசோதனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

Honda 0 Alpha SUV EV: ஹோண்டா நிறுவனத்தின் 0 ஆல்பா மின்சார எஸ்யுவி ஆனது, ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் ராஜாஸ்தானில் உள்ள தபுகரா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஹோண்டா 0 ஆல்பா மின்சார எஸ்யுவி - டெஸ்டிங் ஸ்டார்ட்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய மின்சார எஸ்யுவி ஆன 0 ஆல்பா கார் மாடலை 2026-27 நிதியாண்டில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதற்குமான சாலை பரிசோதனையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த ப்ரோட்டோ டைப் எனப்படும் மாதிரி காரானது உலகம் முழுவதும் 0 ஆல்பா என அடையாளம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்ச்சியில் முதல்முறையாக இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து உள்நாட்டு சந்தையில் ஹோண்டா சார்பில் முதல் மின்சார கார் மாடலாக இது சந்தைப்படுத்தப்பட உள்ளது.

ராஜஸ்தானில் உற்பத்தி - உலக நாடுகளுக்கு ஏற்றுமதி

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள், நகர சாலைகள் மற்றும் சவால்கள் நிறைந்த கரடுமுரடான பாதைகளில் காரின் செயல்திறன் பரிசோதிக்கப்படுவதோடு, பல்வேறு காலநிலையில் காரின் செயல்பாடும்  மதிப்பிடப்பட உள்ளன. உள்நாட்டு சந்தை விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ள இந்த மின்சார காரானது, ராஜஸ்தான் மாநிலம் துபகராவில் உள்ள ஆலையில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. முதலாவதாக இந்தியா மற்றும் ஜப்பான் சந்தைகளில் 0 ஆல்பா காரானது விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்தியா எடிஷன் மட்டுமே ரெடி..

அதிகரித்து வரும் செலவுகள், ட்ரம்பின் மின்சார கார்கள் மீதான லாபத்தை குறைக்கும் பொருளாதார கொள்கைகள் காரணமாக, அமெரிக்காவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்த 0 ஆல்பா எஸ்யுவி மற்றும் செடான் மாடல்களின் உற்பத்தி, தொடங்கும் முன்பே கைவிடப்பட்டதாக ஹோண்டா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. அதேநேரம், இந்தியாவிற்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 0 ஆல்பா பிரிவின் மிகச்சிறிய எஸ்யுவி திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த மாடலின் சாலை பரிசோதனை தொடங்கியுள்ளது. 

0 ஆல்பா எஸ்யுவி - வடிவமைப்பு விவரங்கள்:

ஹோண்டா 0 ஆல்பா எஸ்யூவி கான்செப்ட், ப்ராண்டின் மெல்லிய, இலகுவான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு மொழியைக் கொண்ட, உற்பத்திக்கு அருகிலுள்ள மாடலின் முன்னோட்டமாகக் கூறப்பட்டுள்ளர்து. கான்செப்டைப் போலவே, இறுதி வடிவமும் நிமிர்ந்த மற்றும் அகலமான தோற்றத்தையும், ஒளிரும் ஹோண்டா லோகோவுடன் கூடிய தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க க்ரில், கூர்மையாகச் சரிந்த முன்புற விண்ட்ஸ்கிரீன், ஏரோடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் எடுப்பான வீல் ஆர்ச்களையும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. மற்ற வடிவமைப்பு அம்சங்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட், வெர்டிகல் ரியல் விண்ட்ஸ்கிரீன், முழு அகல U- வடிவ டெயில்லேம்ப்கள் மற்றும் ஃபாக்ஸ் பேஷ் பிளேட்டுடன் கூடிய பின்புற பம்பர் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.


Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை

0 ஆல்பா எஸ்யுவி - இடவசதி, பேட்டரி ஆப்ஷன்..

0 ஆல்பா எஸ்யுவி கார் மாடலின் உட்புறம் மற்றும் பவர்ட்ரெயின் தொடர்பான விவரங்கள் இன்னும் ரகசியமாகவே காக்கப்படுகின்றன. அதேநேரம், நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள சில தகவல்களின்படி, எஸ்யுவி ஆனது சுமார் 2,700 - 2,800 மில்லி மீட்டர் வரையிலான வீல்பேஸை கொண்டிருக்கக் கூடுமாம்.  இது அதிகப்படியான இடவசதியை கார் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.  ஹோண்டாவின் புதிய மின்சார எஸ்யுவி ஆனது 65KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கக் கூடும் என்றும், சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஆனாலும்,  அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை

0 ஆல்பா எஸ்யுவி - விலை, போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் 0 ஆல்பா எஸ்யுவி கார் மாடல் அறிமுகமாகும்போது, மஹிந்த்ரா BE 6,  ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மாருதி இ விட்டாரா, டாடா கர்வ் மின்சார எடிஷன், MG ZS EV மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள டொயோட்டாவின் இ-பெல்லா ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது. தொடக்க விலையானது சுமார் 25 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Embed widget