மேலும் அறிய
Rose Milk Fruit Mixer : இதமான ரோஸ் மில்க் ப்ரூட் மிக்ஸர் செய்வது எப்படி?
Rose Milk Fruit Mixer : ரோஸ் மில்க் ப்ரூட் மிக்ஸர் ரெசிபி எப்படி செய்வதென்று வாங்க பார்க்கலாம்

ரோஸ் மில்க் ப்ரூட் மிக்ஸர்
1/6

தேவையான பொருட்கள்: பால் - 2 கப், ரோஸ் சிரப்- 3 டீஸ்பூன், சர்க்கரை-2 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் சில துண்டு, வாழைப்பழம் நறுக்கியது- 4 , மாம்பழம் நறுக்கியது - 1 கப், அன்னாசி நறுக்கியது - 1 கப், ஆப்பிள் நறுக்கியது - 1 கப், மாதுளைப்பழம் - அரை பழம், திராச்சை ஒரு கொத்து.
2/6

செய்முறை : முதலில் மிக்ஸர் ஜாரில் 2 கப் பாலை சேர்க்கவும். அடுத்தது பாலில் 2 டீஸ்பூன் ரோஸ் சிரப், சில ஐஸ் கட்டிகள் சேர்த்து 2 நிமிடம் அரைக்கவும்.
3/6

அதன் பிறகு மீண்டும் ஒரு டீஸ்பூன் ரோஸ் சிரப், ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
4/6

ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள், மாதுளை, அன்னாசி, வாழைப்பழம், மாம்பழம், திராச்சை அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
5/6

அடுத்தது அனைத்து பழங்களையும் மத்து வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
6/6

அடுத்தது ஒரு பெரிய கண்ணாடி க்ளாசில் முதலில் ரோஸ் மில்க் பாதி அளவு சேர்க்கவும். அதன் பின் கடைந்து வைத்த பழங்களை சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக சில ஐஸ் துண்டுகள் சேர்த்தால் சுவையான ரோஸ் மில்க் மிக்ஸர் தயார்.
Published at : 30 Aug 2024 05:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion