மேலும் அறிய
Curry Leaf Chicken Sukka : அட்டகாசமான கறிவேப்பில்லை சிக்கன் சுக்கா ரெசிபி இதோ!
Curry Leaf Chicken Sukka : சிக்கன் பிரியரா நீங்கள் ? அப்போ இந்த கறிவேப்பிலை சிக்கன் சுக்காவை ஒரு முறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
கறிவேப்பிலை சிக்கன் சுக்கா
1/6

தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, சிக்கன் - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 7 , மிளகு - 2 தேக்கரண்டி , சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 1/2 தேக்கரண்டி, தனியா - 2 மேசைக்கரண்டி , பட்டை ,கிராம்பு, ஏலக்காய் - 3 , எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 , தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
2/6

செய்முறை : முதலில் கடாயில் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கறிவேப்பிலையோடு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
Published at : 16 Jul 2024 11:36 AM (IST)
மேலும் படிக்க





















