மேலும் அறிய
Eggplant Gravy: தோசைக்கு தொட்டுக்க சுவையான கத்திரிக்காய் கிரேவியா? ரெசிபி இதோ!
சுவையான கத்தரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

கத்தரிக்காய் கிரேவி
1/6

தேவையான கத்தரிக்காயை கழுவி விட்டு வட்ட வடிவில் சற்று தடிமனாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு உருளைக் கிழங்கை இதே போன்று வட்ட வடிவில் சற்று தடிமனாக வெட்டிக் கொள்ளவும்.
2/6

இவற்றை தனித்தனியே எண்ணெயில் சேர்த்து பொரிக்க வேண்டும். லேசாக நிறம் மாறியதும் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
3/6

மிக்ஸி ஜாரில் 4 ஸ்பூன் தேன்ங்காய், 7 பல் பூண்டு, 3 ஸ்பூன் வேர்க்கடலை, 1 இன்ச் அளவு இஞ்சி நறுக்கியது, 2 பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். பொரிந்ததும், இப்போது நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும். வதங்கியதும், இரண்டு தக்காளியை அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5/6

ஒரு ஸ்பூன் மிள்காய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் வதக்கி விட்டு, இப்போது தேங்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்துள்ள கலவையை இதில் சேர்க்கவும். இதை ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலக்கி விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும்.
6/6

இதை ஒரு முறை கலந்து விட்டு மூடி போட்டு, 3 நிமிடம் வேக விட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். சூப்பரான கத்தரிக்காய் கிரேவி தயார்
Published at : 31 Mar 2024 06:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
விளையாட்டு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion