மேலும் அறிய
Healthy Eating: டயட் முக்கியமில்லை; மகிழ்ச்சியாக சாப்பிடுங்க! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்!
இது ஆங்கிலத்தில் "intuitive eating" என்றழைக்கப்படுகிறது. National Eating Disorders Association இந்த முறையை சரியானது என பரிந்துரைக்கிறது.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள்
1/7

"Intuitive Eating: A Revolutionary Program that Works." - இந்த புத்தகத்தில் ஒருவர் தங்களுக்கு விரும்பிய உணவுகளை சாப்பிடலாம். அதேவேளையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2/7

நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர்; அது மிகவும் பிடித்ததாகவே இருந்தாலும்.. அளவோடு வெண்ணெய் உணவில் சேர்த்துகொள்வது உடலுக்கு நல்லது மட்டுமே. கவலையோடு டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்பதில்லை..
3/7

உடலுக்கு எனர்ஜி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று பொருள். எனவே, பசிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என எதாவது அருந்தலாம். நேரத்து சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட நேரமாகிவிட்டால் நட்ஸ், பழங்கள் என ஏதாவது சாப்பிடலாம்.
4/7

வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும்.
5/7

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை உணர்துகிறது ’Intuitive eating'என்ற முறை. இதன்படி, எந்த உணவையும் நல்லது, கெட்டது என்றெல்லாம் வரையறுக்க வேண்டியதில்லை. உணவின் அளவு மட்டுமே முக்கியம்.
6/7

எந்தவொரு உணவையும் சாப்பிட்டு முடித்தவுடன் திருப்தியான உணர்வு ஏற்பட வேண்டும். மகிழ்ச்சியுடன் சாப்பிட வேண்டும்.
7/7

சாப்பிடும்போது வேறு எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்பது நல்லது. சுவைத்து சாப்பிட வேண்டும். தட்டில் உள்ளதை காலி செய்ய வேண்டும் என்ற உணர்வோடு சாப்பிடாமல், ருசித்து சாப்பிட வேண்டும்.
Published at : 01 Nov 2023 07:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement






















