மேலும் அறிய
Kulukki Sarbath : வெயில் காலத்தை இதமாக்க ஜிலு ஜிலு குலுக்கி சர்பத்..ரெசிபி இதோ!
Kulukki Sarbath : வெயில் காலத்தை சமாளிக்க இந்த குலுக்கி சர்பத்தை ட்ரை செய்யுங்கள்.
குலுக்கி சர்பத்
1/6

தேவையான பொருட்கள் : சப்ஜா விதைகள் - 2 தேக்கரண்டி, எலுமிச்சை பழம் - 1, பச்சை மிளகாய் - 1, உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 2 தேக்கரண்டி, புதினா இலை, ஐஸ் கட்டி, தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும்.
3/6

எலுமிச்சைபழத்தின் மேல்பாகத்தை சிறிது நறுக்கிய பின் பழத்தை பாதியாக நறுக்கவும்.
4/6

பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
5/6

கிளாஸில் நறுக்கிய எலுமிச்சை பழத்துண்டு, உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
6/6

மற்றோரு கிளாஸ் வைத்து மூடி, நன்கு குலுக்கவும். குலுக்கி சர்பத் தயார்.
Published at : 24 Feb 2024 05:56 PM (IST)
மேலும் படிக்க





















